ஏமாற்றம் ஏமாற்றம் எல்லாமே ஏமாற்றம்.பணம்,காதல் என்கிற நிறம் ,அதன் பின்னால் விசா பெறும் நோக்கம்.உங்களுடைய உணர்வுகள் தூண்டப்பட்டு எப்படி நீங்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படலாம்?இதோ ஒரு உறங்காத உண்மை.பெண்களே !!! ஆண்களே உசார்!!!!!.......இலங்கை பையனின் காதல் கூத்தும் விசா மேட்டரும்...
எங்களுடைய
முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை
என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற
வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும்
ஒருபோது பேசிகொண்டதில்லை.
அன்று
தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப்பின் மூலம்
நாங்கள் இருவரும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம். அவரது இதயத்தில்
எனக்காக ஒரு இடம் இருப்பதையும், எனது இதயத்தில் அவருக்காக ஒரு இடம்
இருப்பதையும் எங்கள் இருவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
எனக்குள்
இதுபோன்ற ஒருவித மாற்றம் எழுந்ததே இல்லை. அவனை நான் பார்க்கும்போதெல்லாம் என்
மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். “கண்கள்
இரண்டால் என் கண்கள் இரண்டால்”, “முன்பே வான் என் அன்பே வா” ஆகிய
காதல் கீதங்கள் என் மனதுக்குள் ரீங்காரம் இசைத்து என்னை பரவசப்படுத்தும். என்
மனதுக்கு அவன் எப்படி வந்தான் என்பதை நினைத்து கொண்டு படுக்கையில் இருக்கையில், வானத்து
நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு எங்கள் இருவரின் உருவத்தை ஒன்றாக இணைத்து என் கண்களை
கிரங்கடிக்கும்.
நாங்கள்
இவருவரும் ஒருவரையொருவர் ஒன்றாக புரிந்துவைத்துக்கொண்டோம். அவன் ஒருபோதும் என்
பெண்மையை பற்றி சந்தேகம் கொண்டது கிடையாது. அதுபோன்று எந்தவொரு செயலையும்
செய்யவேண்டும் என என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது உணர்வுகளுக்கு
மதிப்பளித்தான்.
எங்கள்
இருவருக்குள்ளும் இணைபிரியாத ஒரு பந்தம் உருவானது. இதனால் எங்கள் இருவரையும்
யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தேன். 4 மாதங்கள்
கடந்தது. ஒரு நாள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். என்னை திருமணம் செய்து
கொள்கிறாயா? இந்த கேள்வியை கேட்டதும் நான் அதிர்ச்சியில்
உறைந்தேன்.
ஏனெனில், நாம்
சந்தித்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் இல்லாமல் இதனை
அறிந்தால் எனது பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று. எனது வயது 19, அவனின்
வயது 26. எந்த ஒரு தமிழ் தாயும் 19 வயதுடைய
தனது மகளை தனியாக வெளியில் அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள். அதோடு எனக்கும்
அவருக்கும் 7 வயது வித்தியாசம்.
ஆனால், “காதலுக்கு
வயதில்லை” என்று சொல்வார்கள். அதுதான் என் வாழ்வில்
நடந்தது. அவர் எந்த அளவுக்கு எனக்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம்
நான் சிந்திக்கவில்லை. அவன் மீதுள்ள அளவுகடந்த அன்பே, என்னை
இப்படியெல்லாம் சிந்திக்க தூண்டிது. இருப்பினும் இந்த சிறுவயதில் திருமணம்
செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.
நான்
பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், பணம்
சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்குள் இருந்தது. ஆனால் அவனின் நோக்கம்
எல்லாம் ஒன்று தான், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதன்
மூலம் அவனுக்கு விசா, பட்டப்படிப்பு, வேலை, பணம் ஆகிய
அனைத்தும் கிடைக்க வேண்டும்.
சொல்லப்போனால், அவனின்
கண்களுக்கு நான் Golden Ticket
போன்று தெரிந்துள்ளேன். நாங்கள் இருவரும்
காதலிப்பதை அவனது பெற்றோரிடம் சென்று, நான் தான்
தெரிவிக்க என்று என்னிடம் கேட்டுக்கொண்டான். மேலும் எனது பெற்றோரிடமும் வந்து
முறைப்படி என்னை பெண் கேட்பதிலும் அவன் பின்வாங்கினான்.
விசா என்ற
போர்வையில் காதல் நாடகமாடிய அவனின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இவனுக்கு எப்போது
விசா கிடைப்பது? எப்போது தொழில் கிடைப்பது? இவை இருந்தால்
தான் எனது பெற்றோர் இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார்கள். இவனின் விருப்பமும்
இலங்கைக்கு செல்வதில்லை, மாறாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும், அதற்கு
என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
அவனுக்கு
உண்மையாக இருந்தேன், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாத என்பதை
உணர்ந்தேன், ஆனால் என்னுடைய உணர்வுகளோடு விளையாடிய அவனை
மறப்பதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் அவனை கைவிட்டு எனது பாதையில்
பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த காதலின் மூலம் நேர்மறையான எண்ணங்களை
கற்றுக்கொண்டேன். அந்த எண்ணங்களோடு பயணிப்பதால் எனது வாழ்க்கை தற்போது நன்றாக
இருக்கிறது.
இதன்
மூலம், விசா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும்
ஆண்களுக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன், உங்களுக்கு
எதிர்காலம் இங்கு இல்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் விசா கிடைக்க வேண்டும்
என்பதற்காக, எந்தவொரு பெண்ணின் உணர்வுகளோடும்
விளையாடதீர்கள். இலங்கையில் எவ்வளவோ அழகான பெண்கள் வசிக்கிறார்கள், அங்கு
சென்று உங்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.
ஆனால், அதற்கு
பதிலாக என்னை போன்று பெண்களின் அழகான இதயத்தை நொறுக்காதீர்கள்.எனது இந்த கதையினை
வெளிநாட்டு பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விசா இல்லாத ஆண்களின்
காதல் வலையில் ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள், ஏனெனில்
உங்களை பயன்படுத்தி அவர்கள் விசா பெற்றுவிட்டார்கள் என்றால் உங்களை விட்டு
பிரிந்துசென்று விடுவார்கள். இறுதியில் நீங்கள் தான் மன நிம்மதி இழந்து தவிப்பீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக