சனி, 10 பிப்ரவரி, 2018

என்னை ஜெயிலில் போடாமல், சுட்டுக்கொன்று விடுங்கள்' பிலிப்பைன்ஸ் அதிபர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போர் குற்ற நடவடிக்கை காலத்தில் நாள்தோறும் சுமார் 44 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பன்முகத்தன்மையை மாற்றி ஒருமுகப்படுத்தப்பட்ட மத்திய ஆட்சிக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலம் அனைத்து மாகாணங்களிலும் சமச்சீரான ஆட்சி முறையை அறிமுகப்படுத்தவும் ரோட்ரிகோ டுட்டர்டே முயன்று வருகிறார்.

அவரது இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பிலிப்பைன்சில் நடத்தப்பட்ட கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக நீதிமன்ற வழக்கறிஞர் பெனுசவுடா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நேற்று முன்தினம் பேசிய ரோட்ரிகோ, 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்னிடம் விசாரணை நடத்தலாம். இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தும் போது நானும், பென்சவுடாவும் மட்டும் தான் இருக்க வேண்டும். நான் மனித இனத்திற்கு எதிராக குற்றங்கள் செய்தது நிரூபிக்கப்பட்டால் எனக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. என்னை ஜெயிலில் போடாமல், சுட்டுக்கொன்று விடுங்கள்' என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக