ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஜேர்மனிக்கு பேராபத்து! எச்சரிக்கும் பத்திரிகையாளர்


அகதிகள் என்ற பெயரில் நுழையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஜேர்மனிக்கு பேராபத்து ஏற்பட உள்ளதாக பிரபல இஸ்ரேல் பத்திரிகையாளர் Zvi Jecheskeli தெரிவித்துள்ளார்.
சிரிய அகதிகள் என்ற பெயரில் ஐரோப்பாவிற்குள் நுழைந்து மற்ற இஸ்லாமியவாதக் குழுக்களுடன் தொடர்பு கொள்வது எவ்வளவு எளிது என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஜேர்மனிக்குள் நுழைந்து அகதியாக புகலிடம் பெறுவதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரே ஒரு சிரிய பாஸ்போர்ட் மட்டும்தான் என்று கூறும் Zvi Jecheskeli, தான் எவ்வாறு ஒரு இஸ்லாமியர் போல வேடமிட்டு ஜேர்மனிக்குள் எளிதாக நுழைந்தார் என்பதை விளக்குகிறார்.
உளவுத்துறை அலுவலர் ஒருவரின் உதவியால் இஸ்தான்புல்லில் உள்ள சிரிய சமூகத்தைத் தொடர்பு கொண்ட அவர், உண்மையானது போலவே தோற்றமளிக்கும் போலி சிரிய பாஸ்போர்ட் ஒன்றைப் பெற செலவழித்தது வெறும் 1250 டொலர்கள் மட்டுமே.
நம்புங்கள், சில நாட்களுக்குள் அவர் பெர்லினிலுள்ள சிரிய அகதிகள் முகாமொன்றில் இருந்தார்.



அங்கிருக்கும் பாலஸ்தீனிய சமூக ஆர்வலர் ஒருவர் எவ்வாறு Zvi Jecheskeli தனது குடும்பத்தை கடல் வழியாக திருட்டுத்தனமாக ஜேர்மனிக்குள் கொண்டு வருவது என்பதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தார்.
Muslim Brotherhood என்னும் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான Yusuf al-Qaradawi என்னும் எகிப்திய இஸ்லாமியவாத இறையியலாளர் கூறிய “மீண்டும் இஸ்லாம் மேற்கத்திய நாடுகளையும் ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கும்” என்னும் கூற்றை நினைவு கூறும் Zvi Jecheskeli, அகதிகள் என்ற பெயரில் நுழையும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஐரோப்பாவுக்கு பேராபத்து ஏற்பட உள்ளது என்னும் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக