கூகுள்
நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள்
மூலம், இணையத்தில் வருமானம் பெற
முடியும். அதில் இவ்வளவு காலங்களாக தமிழை கூகுள் நிறுவனம் புறக்கணித்து வந்த
நிலையில், இலங்கை தமிழர்
முயற்சியினால் இன்று தமிழ் சேர்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்திருக்கிறது.நம்
வெப்சைட்டில் பிற நிறுவனங்களின் விளம்பரங்களைப் போடுவதற்கு அனுமதி கொடுத்து,
அதுக்கு அவர்களிடம்
இருந்து கட்டணத்தைப் பெறுவது ஒரு வகையான வியாபார உத்தி. இதுக்கு நாம்தான்
மார்கெட்டிங் செய்ய வேண்டும். வெப்சைட்களில் விளம்பரங்கள் ஆங்காங்கே வெளிவந்திருப்பதைப்
பார்த்திருப்பீர்கள். அவை இந்த வகையைச் சேர்ந்தவை.
மற்றோர் உத்தி,
நம் வெப்சைட்டின் சில
பகுதிகளை அப்படியே கூகுளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால், அவர்கள் அந்த இடங்களில் விளம்பரங்களை
வெளியிட்டுக்கொள்வார்கள். நமக்கு அதுக்கான வாடகையும் கொடுப்பார்கள்.
கூகுள் மூலம்
வெளிவரும் விளம்பரங்களில் Ads by Google, AdChoices, AdWords என்ற இணைப்பு வார்த்தைகள் இருப்பதைக்
கவனியுங்கள். இதற்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டாம். கூகுள் அவற்றைப்
பார்த்துக்கொள்ளும். உங்கள் சார்பில் மார்க்கெட்டிங் செய்து, விளம்பரம் பெற்று, அவற்றை உங்கள் வெப்சைட்டில் வெளியிட்டு,
கட்டணமும் கொடுக்கும்.
ஆட்சென்ஸ் (AdSense)
என்றால் என்ன?
கூகுள்
கல்வி-மருத்துவம்-ஆராய்ச்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர
நிறுவனங்கள் போன்றவற்றிடம் விளம்பரங்களை நல்ல விலைக்குப் பெறுகிறது. பிறகு வெப்சைட்
வைத்திருப்பவர்களிடம், விளம்பரங்களுக்குத்
தேவையான இடத்தை அவர்கள் அனுமதியுடன் எடுத்துக்கொண்டு, அதில் அந்த விளம்பரங்களை வெளியிடுகிறது.
இதுக்கு ஆட்சென்ஸ் என்று பெயர்.
நம் வெப்சைட்டில்
கூகுள் நிறுவனத்துக்கு இடத்தைக் கொடுத்து, விளம்பரங்களை வெளியிட நாம் அனுமதிக்கலாம். நம் அனுமதி இல்லாமல் கூகுளோ அல்லது
வேறு எந்த நிறுவனமோ நம் வெப்சைட்டில் இடத்தை ஆக்கிரமிக்க இயலாது.
நம் வெப்சைட்டின்
உள்ளடக்கத்துக்கு ஏற்ப பொருத்தமான விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதால்,
நம் வெப்சைட்டுக்கு வருகிற பார்வையாளர்கள் அந்த
விளம்பரங்களையும் க்ளிக் செய்து பார்ப்பார்கள்.
ஒரு விளம்பரம்
எத்தனை முறை க்ளிக் செய்யப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்ப நமக்கு வாடகை கிடைக்கும்.
இதில் உலகில்
உள்ள பல மொழி இணையதளங்களுக்கும் உரிமம் கிடைத்து வந்த நிலையில், தமிழ் மொழியை மட்டும் புறக்கணித்து வந்தது.
இதுவரை பல மில்லியன் வெப்சைட்டுகள் இதனால் முடக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்,
இலங்கை தமிழர் ஒருவர்
எடுத்த முயற்சியினால் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து, இனி தமிழ் மொழி இணையதளங்களும் இதன் மூலமாக
வருமானம் ஈட்ட முடியும். இனி இணையதளத்திலும் இதன் மூலமாக தமிழ் புரட்சி ஏற்படும்
என்பது குறிப்பிடத்தக்கது.