புதன், 24 ஜனவரி, 2018

மணப்பெண் காதலருடன் ஓட்டம்,தாலியுடன் மாப்பிள்ளை கொண்டாட்டம்,மாப்பிள்ளை வீட்டார் ஆர்ப்பாட்டம்,8 லட்சம் சேதாரம்

திருமணத்துப் பெண், தாலி கட்டிய சில நிமிடங்களில் கட்டிய தாலியை அவிழ்த்து மாப்பிள்ளையின் கைகளில் கொடுத்துவிட்டு காதனுடன் ஓட்டம் பிடித்ததும், அதற்காக மாப்பிள்ளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்

திரிச்சூர் மாவட்டம் மல்லச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் கேரளத்து வழக்கப்படி திருமணம் நடந்தது. தளி கட்டிய பிறகு புதுமண தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வேறொரு இளைஞரைக் கண்டு உணர்ச்சியடைந்த மணப்பெண், தாலியை அங்கேயே கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு வரிசையில் இருந்து வெளியேறினார். பின்னர் அந்த இளைஞரை தனது காதலர் என அறிமுகப்படுத்திய இளம்பெண், தங்களது திருமணத்திற்கு தன் வீட்டில் அனுமதி தரவில்லை. எனவேதான் திருமணம் வரை காத்திருந்தேன். இனிமேல் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு காதலருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இரு வீட்டாருக்கும் இடையே கோவிலுக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை நடக்க, போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கேயே பஞ்சாயத்தும் அரங்கேறியது. நடந்த சம்பவத்திற்கு இழப்பீடாக மணமகன் வீட்டார் 15 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். பெண் வீட்டார் பேரம் பேசி 8 லட்சம் வரை கொண்டுவந்தனர். பணம் கொடுத்ததற்கு பிறகு இரு வீட்டாரும் களைந்து சென்றுவிட்டனர்.

எப்படியோ பிரச்சினை தீர்ந்தது என நினைத்தால், அது சமூகவலைத்தளங்களில் பெரிய பஞ்சாயத்தாக மாறிக்கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து காரசார விவாதங்கள் நடக்க, சிலர் அந்த பெண்ணை பாராட்ட, சிலர் திட்ட, இடையில் பலரும் மணமகனின் பரிதாபங்களைக் கண்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.


தன் வீட்டில் வரவேற்பிற்க்காக வைத்திருந்த கேக்கை மாப்பிள்ளை வெட்டிக் கொண்டாடினார் .காரணம் வேறு ஆணுடன் காதல் வயப்பட்டவள், எப்படியும் என்னுடன் மனக்கசப்புடனேயே வாழுவாழ் என்பதே.ஆகவே ஓடிப்போனது மிக நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக