தரகர் மூலம் மறைத்து புது கல்யாணம் செய்து,கோவில் திருணம்
முடிந்து ஊர்வலாக ஆட்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக்
கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும்
மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது
பதற்றமடைந்தனர்.
மாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் ”அவனை பிடியுங்கள்“ என உரக்க
சத்தமிட்டபோதுதான் எல்லோருக்கும் விடயம் தெரியவந்த்து.
மாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருவதாவது.
கோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக
மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும்
மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.
மணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் வீதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து
எட்டிப்பார்த்தார். மணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன்
நிற்பதைக் கண்டார்.
இதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி
ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி
மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.
காருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன்
ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை
பிடியுங்கள்“ எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.
அப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர்
என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர்.
மணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச்
சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த
பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்