புதன், 31 மே, 2017

இன்னொரு பூமிக்கு செல்ல றெடியா?.இதோ 2வது பூமி ரெடி/ Supper Earth

உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு லண்டன்: விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமியை போன்று உயிரினங்கள் வாழும் தகுதி படைத்தது. அது பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது.
 இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில்ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது. உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ளஇன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்நிறுவன விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
 இதன்மூலம் சூரிய குடும்பம் அருகேயுள்ள வாழத் தகுதியுள்ள 6-வது கிகரமாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகவும் இது கருதப்படுகிறது.
பூமியைக் காட்டிலும் 1.4 மடங்கு பெரிதாகக் காணப்படும் இந்தக் கிரகம், சுமார் 39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. இதற்கு 'GJ 1132b' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கிரகத்தை 'சூப்பர் எர்த்' என்று விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இதைச் சுற்றி பல அடுக்குகளாக வாயுகள் உள்ளன. இவை தண்ணீராகவோ அல்லது மீத்தெய்ன் அல்லது இரண்டும் கலந்த கலவையாகக் கூட இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

நம்முடைய சூரியக் குடும்பத்திற்கு அப்பாலுள்ள கிரகங்களில் உயிரினங்களைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு இத்தகைய புற வாயுப் படலங்கள் மிக முக்கியமானதாகும் என்று விஞ்ஞானி டாக்டர் ஜோன் சவுத்வொர்த் தெரிவித்தார்.


எனினும், இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வழியுண்டு என்று நாம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்து விடமுடியாது. ஏனெனில் இந்தக் கிரகம் பூமியைவிட பல மடங்கு வெப்பமானதாக தென்படுகிறது என்று அவர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக